ஸ்ரீசூலினி துர்கை கோயில், கோமுக்தீஸ்வரம், கோவிந்தகுடி
துர்கையின் 9 வடிவங்களில் சூலினி துர்கை ஒருவர். ஈசன் சம்ஹாரம் செய்யும் வேளையில் சூலம் தாங்கி அவருக்கு உடன் நின்று செயல்படும் வேக வடிவத்தினள் இவள். சரப மூர்த்தியின் இரு இறக்கைகளில் ஒரு இறக்கையாக விளங்குபவள் சூலினி துர்கை. மஹிக்ஷனின் சிரசின் மீது நின்றருளி ஆபத்துக் காலங்களில் பக்தர்களைக் காக்க வல்லவள். இவளை வழிபட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சூலினி துர்கா ஹோமம் செய்தால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். காரிய வெற்றி, திருமண வரம் போன்றவை கிட்டும்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 ஏப்ரல் 28-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை பஞ்சமி நாளில் ஸ்ரீசூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் வழியில்
பட்டீஸ்வரம் அடுத்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கோவிந்தகுடி கோமுக்தீஸ்வரம் ஆலயம். வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் தொன்மையான சூலினி துர்கை சந்நிதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் சூலினி துர்கை ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் ஆரோக்கியம், ஆயுள், அபிவிருத்தி, மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். தீமைகள், தோஷங்கள் விலகி , சந்தோசம் பெறுக இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கின்றன ஞான நூல்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம், ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.