ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்
ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் வராஹ மூர்த்தியின் பெண் அம்சமாய் கருதப்படுகிறாள். அனைத்து வாழ்வாதாரங்களையும் அளிக்கக் கூடிய ஆதார சக்தி இவள். ஸ்ரீ லலிதையின் சேனைத்தலைவி இவளே. சகல கவலைகள், அச்சங்கள் யாவிலுமிருந்து காப்பவள் வராஹி. பஞ்சமி திதியில் தான் வராஹி அம்மன் அவதரித்தார் என்கின்றன புராணங்கள். எனவே ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராஹி அம்மனை வழிபட்டால் வாழ்வில் பலவிதமான ஏற்றங்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 செப்டம்பர் 22-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீசக்ர வராஹியாக அன்னை இங்கே வீற்றிருந்து பல்வேறு சித்துக்களை செய்து பக்தர்களைக் காத்து வருகிறாள். எனவே இங்கு ஸ்ரீப்ரத்யக்ஷ வராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத கடன்கள் தீரும்; வாட்டும் வியாதிகள் நீங்கும்; மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும் என்கிறார்கள்.
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.