ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள், கோட்டூர், கஞ்சனூர்
திருமகளை மடியில் ஏந்திய திருவடிவமே ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் என்று வணங்கப்படுகிறது. மிகப்பழைமையான ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூருக்கு அருகே கோட்டூரில் அமைந்துள்ளது. புதபகவான் வணங்கிய திருத்தலமிது. இத்தலத்தில் பெருமாளை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் லட்சுமி நாராயண யோகம் அமையும். இதனால் மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும். திருமகளை இங்கே பெருமாள் கைத்தலம் பற்றி மடியில் அமர்த்திக் கொண்டதால் திருமண வரமருளும் தலமாகவும், உற்சவர் நவநீத கிருஷ்ணராக அருளுவதால் புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் உள்ளது விசேஷம்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 அக்டோபர் 17-ம் நாள் வியாழக்கிழமை புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கோட்டூரில், ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் நடைபெற உள்ளது. திருமகளோடு ஒன்றாக கருவறையில் பெருமாள் அருள்வதால் இங்கே வணங்கி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் செல்வத்தையும் வளத்தையும் குடும்ப ஒற்றுமையையும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் செல்வாக்கு, சொல்வாக்கு பெருகும். கடன்கள் தீரும்; வியாதிகள் நீங்கும்; கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.