ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமம், ஸ்ரீஅக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை ஆலயம், செல்லப்பிராட்டி, செஞ்சி
என்னவெல்லாம் வேண்டி வழிபடுகின்றோமோ அதற்கான அருளைத்தரும் ஆற்றல் படைத்த மகாசக்தி ஸ்ரீஅக்ஷ்ர லலிதாம்பிகை. ராமாயண காலத்தில் அக்ஷ்ர ங்களை குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்க லலிதாம்பிகை கோயில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் அமைந்துள்ளது. மூன்று சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலித்து வருகிறாள். இத்தலத்தில் அம்பிகையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் சேரும். மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும். மேலும் திருமண வரமருளும் தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் உள்ளதால் இது பரிகாரத் தலமாகவும் உள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டியில் ஸ்ரீஅக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமம் நடைபெற உள்ளது. தசரதர் புத்திரான ஸ்ரீராமபிரான் மகனாக பிறப்பதற்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்வித்த மகரிஷி ரிஷியசிருங்கரால் பூஜித்த அன்னை.இவரின் மஹாயாகத்தால் தசரதர் புத்திரர்களை அடைந்தார். இலங்கை மன்னன் இராவணனை போரில் வீழ்த்த ராமபிரான் இந்த அம்மனை யின் ஆலயத்தில் சிறப்புமிக்க பஞ்சதக்ஷாச்சரி யாகம் செய்த பின்னரே இராவணனை வெற்றி பெற்றார் என்பது நம்பிக்கை. சிறப்பு மிக்க ஸ்ரீபஞ்ச தக்ஷாஷரி ஹோமத்தில் தாங்களும் சங்கல்பித்துக் கொண்டால் 16 செல்வங்களையும்
நீண்ட ஆயுளையும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.