பூர்வ ஜென்ம பரிகார பூஜை, ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயம், திருவண்ணாமலை
வாழ்க்கையில் துக்கமும் தோல்வியுமே மிஞ்சுகிறது. யாருக்கும் தொந்தரவு தராமல் வாழ்ந்தாலும் எனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று வருந்துகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்ம வினைகளாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்து அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் பெற ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜையில் பங்கு கொள்ளுங்கள். இதனால் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பதிவு செய்யும் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஒரு தீபம் ஏற்றி பரிகார வழிபாடு செய்யப்படும்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 7 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அவை திருபுவனம், திருப்பாம்புரம், திருத்தேவன்குடி, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன்கோவில், கும்பகோணம் ராமநாதசாமி கோயில், திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோயில். அம்மணி அம்மன் ஆலயத்தில் அரச இலை தீப வழிபாடு பூர்வ ஜென்ம பரிகார பூஜையாக அமையும் என்பது சித்தர்கள் வாக்கு.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் விபூதி அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.