
மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் ஆலயம், சென்னை
சென்னை கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் மேலக்கோட்டையூரில் உள்ளது மேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். காலமறியா காலத்தே தோன்றிய இந்த ஆலயத்தில் வருணன், மேகநாதன் எனும் இந்திரஜித் ஆகியோர் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமத்தைச் செய்து பலன் பெற்றார்கள் என புராணங்கள் கூறுகின்றன. மேலும் இங்கு வந்து வணங்கி வழிபட்டால் ஆயுள் கூடும் என்பதும் இன்று வரை உள்ள நம்பிக்கை. இந்த ஆலயத்தில் இறைவன் மேகநாதேஸ்வரராய் சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேகாம்பிகை நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய பலமும், ஐஸ்வரியமும் கிட்டும் என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெறுங்கள்! நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் நிறைவான செல்வமும் நிலையான புகழும் அடைய நிச்சயம் இந்த ஹோமம் உதவும். மிருத்யுஞ்சய என்றால், மிருத்யு என்ற யமனை, யமன் போன்ற அச்சங்களை ஜெயிப்பது என்றே பொருள். நீங்களும் சங்கல்பியுங்கள்!
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.