
தென்னக காசி பைரவர் திருக்கோயில் அவல்பூந்துறை, ஈரோடு
தென்னக காசி பைரவர் திருக்கோயில் வேறெங்கும் இல்லாத வகையில் 39 அடி உயர பைரவர்திருச்சிலையைக் கொண்டு ஈரோடு அவல்பூந்துறையில் அமைந்துள்ளது. இங்கு கால் வைத்தாலே ஸ்ரீபைரவர் அருளால் தீமைகள், தீவினைகள் யாவும் நீங்கி நலமும் வளமும் பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சகல ஜனங்களும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய அனுமதிக்கப்படும் இந்த புண்ணிய பூமியில் ஆதியில் 64 கோடி யோகினியரும் நவகோடி சித்தர்களும் கூடி இந்த மகாகாள பைரவரை உபாசித்து தவம் இருந்தார்களாம். பிறகு இந்த ஆலயம் தற்போது ஆதிசித்தன். ஸ்ரீவிஜய் சுவாமிகளுக்கு கிடைத்த உத்தரவால் இங்கு பிரமாண்டமாக எழும்பியுள்ளது. அமாவாசை, பௌர்ணமி சிறப்பு யாகங்களும் அஷ்டமி, ராகு கால பூஜைகளும் இங்கு விசேஷம். கடன், வழக்கு, நோய்கள், ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மங்கல காரியங்களில் தடை என எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்பது உறுதி. அமைதியான வாழ்வு பெறவும் ஐஸ்வர்யம் பொங்கும் அதிசயம் காணவும் தேய்பிறை அஷ்டமி மகாகாலபைரவ பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
அன்பார்ந்த வாசகர்களே!
14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு தேய்பிறை அஷ்டமி மகாபூஜை நடைபெற உள்ளது. இந்த வைபத்தால் இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி கிடைக்கும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சியைப் பெருக்கும் இந்த சிறப்பு காலபைரவ பூஜையில் சங்கல்பித்துக் கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.600/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.