தோரணமலை முருகன் கோயில், தென்காசி,
கார்த்திகேயா சுப்ரமணிய ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் யார் எதை வேண்டினாலும் அந்த காரியங்கள் ஈடேறும் என்பது வேத ரிஷிகளின் வாக்கு. முருகனே பிரும்மமானதால் தான் வேத மாதா முருகனைப் பற்றி எதுவும் கூறாமல் 'சுப்பிரமண்யோம்' என்று மும்முறை கூறி மலைக்கிறாள். 'நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே' என்று முருகனைப் புகழ்ந்து ருத்திரத்தில் உள்ளது. 'உள்ளும் புறமுள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்பது இதன் பொருள். முருகனுக்கு மேலான கலியுக தெய்வம் வேறில்லை. அதுவும் தைப்பூச நன்னாளில் தோரணமலை முருகன் கோயிலில் முருகப்பெருமானை கார்த்திகேயா சுப்ரமணிய ஹோமம் செய்து சங்கல்பிக்க எண்ணியவை யாவும் ஈடேறும்.
அன்பார்ந்த வாசகர்களே!
1-2-2026 தைப்பூச நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் தோரணமலை முருகன் கோயிலில் கார்த்திகேயா சுப்ரமணிய ஹோமம் நடைபெற உள்ளது. இந்த அபூர்வமான ஹோமத்தால் எதிர்ப்புகள் விலகி நன்மைகள் கூடும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வளர்ச்சியைப் பெருக்கும் இந்த சிறப்பு கார்த்திகேயா சுப்ரமணிய ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தடைகள் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி, குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.