• Date:

    மார்ச் 6 (வெள்ளிக்கிழமை)
  • Time:

    காலை 8.30 மணிக்கு மேல்
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
ஸ்ரீ வாராகி மந்திர பீடம், சித்தாத்தூர், வேடந்தாங்கல்

வரும் மார்ச் மாதம் 6-ம் தேதியன்று வாக்கியப்படி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் உரிய பரிகாரங்கள் செய்வது அவசியம். அதன் மூலம் சனிக்கிரக பாதிப்புகள் விலகி, நன்மைகள் உண்டாகும். வினைப்படி உரிய பலாபலன்களை அளிப்பவர் சனி பகவான். அவரின் சஞ்சார நிலையில்... முன்வினைப் பாதிப்புகள், தோஷங்கள் அனைத்தும் விலகி நற்பலன்கள் வாய்க்க, சகல ராசியினருக்கும் மேன்மைகள் உண்டாக தெய்வ வழிபாடுகள் உறுதுணை புரியும். அந்த வகையில் - வாசகர்கள் பயனடையும் விதம், சக்திவிகடன் சார்பில் சித்தாத்தூர் - வாராஹிதேவி சந்நிதியில் சிறப்பு சனிப்பெயர்ச்சி பரிகார வழிபாடுகள் - விசேஷ ஹோமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 64 வராஹி ரூபங்கள்... சித்தர்கள் போற்றிப் பூஜித்த தலத்தில்... சகலவிதமான சங்கடங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் துடியான தெய்வம் வாராஹி. அவளுக்கென்றே பிரத்யேகமாக 64 வாராஹி ரூபங்களும் எழுந்தருளியிருக்கும் கோயிலாகத் திகழ்கிறது, ‘சித்தாத்தூர் ச்ரி வாராஹி மந்திர பீடம்.’ சித்தர்கள் போற்றும் இந்தக் கோயிலில் மாண்டுக சித்தரின் ஜீவசமாதி அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சித்த சாந்நித்தியமும் தேவி வாராஹியின் கடாட்சமும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இந்தத் தலத்தில்தான் சக்திவிகடன் மற்றும் சித்தாத்தூர் ச்ரி வாராஹி மந்திர பீடம் இணைந்து வழங்கும் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள் - வழிபாடுகள் நடைபெற உள்ளன. சனிக்கிரக தோஷம் விலகும்; காரிய ஜெயமும் செல்வகடாட்சமும் உண்டாகும் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சனிபகவான் ப்ரீதிக்காக விசேஷ ஆவர்த்திகளோடு நடைபெற இருக்கும் இந்த சிறப்பு ஹோம நிகழ்வில் அன்னை வாராஹிக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன. இதில் சங்கல்பம் செய்து வழிபடுவதோடு, அன்னை வாராஹியை வேண்டிக்கொண்டால், துன்பங்களும் கிரக தோஷங்களும் அகலும்; பூமி தொடர்பான அனைத்துக் காரியங்களும் சுமுகமாக நடந்தேறும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லைகள் தீரும். பிணிப்பாதிப்புகள், கடன் பிரச்னைகள் முழுமையாக விலகும்.

அன்பார்ந்த வாசகர்களே!

இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங் கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
 
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

  •  வாசகர்கள் கவனத்துக்கு:

    இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம  சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஹோம  சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி, குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

044-66802980/07

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 044-66802980/07