• Date:

    மே 16 (சனிக்கிழமை)
  • Time:

    இரவு 7.30 முதல் 9.30 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    500
corona
மஹா பிரத்தியங்கிரா ஹோமம், மாமண்டூர் வடபாதி

சித்தர்கள் போற்றிய தெய்வத் தலம்... மாமண்டூர் வடபாதி பூமாத்தம்மன் சித்தர் பீடம். இங்கு அருளும் பூமாத்தம்மன் சக்திசிவ சொரூபமாகத் திகழ்கிறாள். இங்கே அதர்வண பத்ரகாளி, உக்ர பிரத்தியங்கிராதேவியும் அருள் பாலிக்கிறாள்! அமாவாசை தோறும் உலக நன்மைக்காக இங்கே நிகழும் மஹா பிரத்தியங்கிரா தேவி ஹோமம் மிகவும் சக்திவாய்ந்த வழிபாடு. இதில் கலந்துகொண்டால் கெடுபலன்கள், தீவினைப் பாதிப்புகள் பொசுங்கிப்போகும். வழக்குகளில் தீர்வு, கடன், பிணிப் பிரச்னை களில் நிவாரணம் உண்டாகும். தடைகளும் தோஷங்களும் விலகி கல்யாணச் சுபகாரியங்கள் விரைவில் ஸித்திக்கும். சொந்தவீடு, பொருள் வரவு போன்ற விருப்பங்கள் நிறைவேறும்.

அன்பார்ந்த வாசகர்களே!

சித்தர்கள் போற்றிய இந்தத் தலம் சென்னை-திருச்சி நெடுஞ் சாலையில்  செங்கல்பட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.  இங்கே வரும் வைகாசி சர்வ அமாவாசை புண்ணிய தினத்தில் மஹா பிரத்தியங்கிரா ஹோமம் நிகழவுள்ளது.
இங்கே சக்திசிவ தத்துவமாக அருளும் பூமாத்தம்மன் மீது மகான் மா.கந்தசாமி சித்தர் வடபாதி பூமாது விருத்தம், வடபாதி ஆகாஷ கண்ணியம்மன் விருத்தம் ஆகிய நூல்களைப் பாடி அருளியுள்ளார்.
காஞ்சி மஹாபெரியவா மஹா கும்பாபிஷேகம் செய்து தந்த தலம் இது. துர்கைச் சித்தரும் இங்கு வந்து பூஜித்து வழிபட்டுள்ளார். மட்டுமன்றி, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு தேவலோகக் கன்னிகள் இங்கு வந்து  பூமாத்தம்மனை பூஜிப்பதாக ஐதிகம். ஆகவே, இந்தத் தலத்தில் இரவு தங்கினால் நன்மை உண்டாகும். இங்கே அதர்வண பத்ரகாளி உக்ர பிரத்தியங் கிராதேவியும் அருள்பாலிக்கிறாள்.
இவளை வேண்டி வணங்கி யாகத்தில் சங்கல்பப் பிரார்த்தனை செய்து வழிபடுவதால், கெடுபலன்கள் யாவும் விலக்கி, நன்மைகள் நாடிவரும்.

  •  வாசகர்கள் கவனத்துக்கு:

    இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்ப தால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக் கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
    அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

    குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
    வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக,
    வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்! https://www.facebook.com/SakthiVikatan No Refund: ரிஜிஸ்டர் செய்து பின் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

044-66802980/07

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 044-66802980/07