சென்னையைச் சேர்ந்த ஜீவா கிருஷ்ணமூர்த்தி 7 ஆண்டுகளுக்கும் மேலாக பிரைடல் ஃபிளவர் மேக்கிங் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். திருமணம், ரிஷப்ஷன், சீமந்தம், பூப்பெய்தல், பிறந்தநாள் விழா, பார்ட்டிக்கள் மட்டுமல்லாமல் விளம்பர ஷூட், மாடல் ஷூட் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு விதவிதமான பூ அலங்காரங்கள் செய்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நீங்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நீங்கள் செலுத்திய தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.
தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
நேரடிப் பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு இடைவேளையின்போது தேநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.
நேரடிப் பயிற்சி மற்றும் ஆன்லைன் பயிற்சிக்குத் தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.
நேரடிப் பயிற்சிக்கு பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்துகொள்வதாக இருந்தால் பயிற்சிக்கு 2 நாள்கள் முன்னதாகவே 97909 90404 என்ற எண்ணில் அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குழந்தைகளை உடன் அழைத்து வந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்க இயலாது. (நேரடிப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும்)