அவள் விகடன் மதுரையில் நடைபெறும் 'ஜாலி டே!' நிகழ்ச்சியில் தங்கு தடையின்றி பங்கேற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
''அவள் ஜாலி டே!- வாசகிகளின் திருவிழா' நிகழ்ச்சி ஜூன் 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
போட்டிகள் : பாட்டு, நடனம், அடுப்பில்லா சமையல், ரங்கோலி, ரீல்ஸ்
குறிப்பு: ஒருநபர் இரண்டு போட்டிகளில் பங்கேற்கலாம்
முன்பதிவு நடைமுறைகளில் பங்கேற்பதற்கு வசதியாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே அரங்கத்துக்கு வந்துவிட வேண்டும்.
நிகழ்ச்சிக்கு ஆண்கள் வர அனுமதியில்லை.
போட்டிகளில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 25 கிராம் வெள்ளி நாணயம் பரிசு பெறும் வாய்ப்பைப் பெறுங்கள்!
1. பாட்டு - தங்களுக்குப் பிடித்தமான எந்தப் பாடலை வேண்டுமானாலும் பாடலாம். ஒரு நபருக்கு அதிகபட்சம் 3 நிமிடங்கள் கொடுக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
2. நடனம் - தங்களுக்குப் பிடித்தமான எந்த வகையான நடனத்தையும் ஆடலாம். ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 நிமிடங்கள் கொடுக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.
3. ரீல்ஸ் - நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தலைப்பு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ற ரீல்ஸை போட்டியாளர்கள் உருவாக்க வேண்டும். வீடியோ கன்டென்ட் ஒரு நிமிடத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
4. ரங்கோலி - கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்த ரங்கோலியை வரையலாம். ரங்கோலி போட்டிக்குத் தேவையான பொருள்களை போட்டியாளர்களே எடுத்து வர வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சம் 45 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
5. அடுப்பில்லா சமையல் - தேவையான பொருள்களைப் போட்டியாளர்களே எடுத்து வர வேண்டும். வீட்டிலிருந்து சமைத்து எந்த உணவையும் எடுத்துவரக்கூடாது. நிகழ்விடத்துக்கு வந்து உணவைத் தயாரிக்க வேண்டும். ஒரு நபருக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் கொடுக்கப்படும்.
* போட்டிகளைப் பொருத்தவரையில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.