* லால்குடி: அப்பர் பெருமான் `பண்டெழுவர் தவத் துறை’ என்று சிறப்பிக்கும் தலம். சப்தரிஷிகள் வழிபட்ட ஆலயம். காபாலிகர் போற்றும் கட்வாங்க ஈஸ்வரரின் சிற்பம் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது.
* திருவாசி: ஆதியில் திருப்பாச்சிலாச்சிராமம் வழங்கப்பெற்ற ஊர். திருஞானசம்பந்தர் பதிகத்தால் கொல்லி மழவன் எனும் மன்னின் மகள் பிணி தீர்ந்த தலம். திருவடியில் சர்ப்பத்துடன் திகழும் நடராஜரும், சகஸ்ர லிங்கமும் இத்தலத்தின் விசேஷ மூர்த்திகள்.
* துடையூர்: விஷப் பாதிப்புகள் நீக்கும் ஈஸ்வரன், வாதப் பிணி அகற்றும் வாத முனீஸ்வரர் அருளும் தலம். இந்தச் சிவாலயம் 1300 ஆண்டுகள் தொன்மையானது என்பதை, அப்பர் தேவாரத்தால் அறியலாம். இங்குள்ள ஞானசரஸ்வதி, வீணாதரர், ஆலிங்கன மூர்த்தி முதலான சிற்பங்கள் பலவும் பொக்கிஷங்கள்!
* சீனிவாசநல்லூர்: இந்திய தொல்லியல்துறையினரால் பாதுகாக்கப் படும் ஆலயம். முற்காலச் சோழர்களின் சிற்பப் படைப்பு. பல்லவர் ஆட்சியிலும் சிறப்புற்று திகழ்ந்தமைக்கு சாட்சியாக கல்வெட்டுகள் இவ்வூரை மஹேந்திர மங்கலம் எனக் குறிப்பிடுகின்றன. பிட்சாடனர், ஆலமர்ச்செல்வன் மற்றும் மகரதோரணச் சிற்பங்கள் அவசியம் தரிசிக்கவேண்டியவை.
* சோழமாதேவி: ராஜராஜசோழனின் மனைவி சோழமாதேவியின் பெயரில் தற்போதும் வழங்கப்பெறும் ஊர். தஞ்சைபெரியகோவில் மெய்க்காவலுக்கு இவ்வூரிலிருந்தும் நால்வர் சென்றுள்ளனர். இங்குள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு, ஆதிசங்கரின் `பகவத் பாதீயம்’ எனும் சாரீர பாஷ்யத்துக்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் தினமும் இக்கோயிலில் சொற்பொழிவு ஆற்றிய தகவலைச் சொல்கிறது.
* திருநெடுங்களம்: திருஞானசம்பந்தரின் இடைர்களையாய் பதிகத் தால் சிறப்புப் பெற்ற தலம். அம்மை ஒப்பிலாநாயகியுடன் நெடுங்கள நாதர் அருளும் ஆலயம். வெண்கலக்குதிரை, சோழர் காலக் கல்உரல், யோக தட்சிணாமூர்த்தி, கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் ஆகியன இந்தக்கோயிலின் விசேஷ அம்சங்கள்!
* பசுபதிகோவில்: பால்வள நாயகியுடன் பசுபதிநாதர் அருளுமாலயம். கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்று. சோழர் கால துண்டு கல்வெட்டுகளும், கட்டுமா னங்களும், ஜேஷ்டாதேவியின் சிற்பமும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்.
* திருப்புள்ளமங்கை: கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில் ஒன்று - சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. அகழி அமைப்புடைய கருவறை, விமானத்தின் கீழ் சிவபுராணம், ராமாயணக் காட்சிகள் மற்றும் மகிக்ஷாசுரமர்த்தினி சிற்பம் ஆகியன இக்கோயிலின் தனிச் சிறப்புகள்.
* சேலூர் தேவராயன்பேட்டை: மீன ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலம். இவ்வூருக்குத் தெற்கில் தேவராயன்பேட்டை என்ற பெயரில் வேறொரு சிறிய ஊர் உள்ளதால், இவ்வூரைக் `கோயில் தேவராயன் பேட்டை என்கின்றனர். முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப் பட்டது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன!
* தாராசுரம்: சிற்பிகளின் கனவு எனும் போற்றுதலுக்குரிய இந்த ஆலயம் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. இசைப்படிக்கட்டுகள், தேர் வடிவில் அமைந்த ராஜ கம்பீரன் மண்டபம், பெரியபுராணச் சிற்பங்கள் என இந்த ஆலயமும் அதன் பகுதிகளும் அணு அணுவாய் ரசிக்கத்தகுந்த சிற்பப் பொக்கிஷங்கள்!
* திருவலஞ்சுழி: வெள்ளைப் பிள்ளையாரால் சிறப்புப் பெற்ற தலம் திருவலஞ்சுழி. காவிரி வலஞ்சுழியாக பாய்ந்த தலம். கோயில் முழுதும் இராஜராஜனின் குடும்பத்தவர் பொறித்த கல்வெட்டுச் சாசனங்கள் இடம் பெற்றுள்ளன. திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்), சிற்பிகளே வியக்கும் சிற்ப அற்புதம் ஆகும்.
* திருபுவனம்: அடியார்களின் பயத்தைத் தீர்த்தமையால் நடுக்கம்தீர்த்த பெருமான் எனும் பெயருடன் ஈசன் அருளும் ஆலயம். சச்சிதானந்த விமானத்துடன் அருளும் இந்த ஆலயத்தில், சரபேஸ்வரர் சந்நிதி விசேஷமானது. ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதன் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஆலயம் என்கிறது கல்வெட்டு!
நீங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி.
Thank you for registering.
மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan.com / 9677069112
சோழர் உலா பயணத்தில் பங்கேற்கவுள்ள வாசகர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.
சோழர் உலா- வரலாற்றுப் பயணம் சென்னையில் தொடங்கும் இடமும், நேரமும் யாத்திரையில் பங்கேற்கும் வாசகர்களுக்குப் பிரத்யேகமாகப் பின்னர் அறிவிக்கப்படும்.
பயண காலமாகிய 2 நாள்களும் வாசகர்களுக்கான உணவு, தேநீர் - காபி, மற்றும் இரவில் (1 இரவு) தங்குவதற்குச் சிறப்பான விடுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சரித்திரப் பயணத்தில்… நாம் காணவுள்ள குறிப்பிட்ட இடங்கள் மற்றும் கோயில்களில் உரிய வரலாறுகள், கல்வெட்டுத் தகவல்கள், தொன்மைச் சிறப்புகள் முதலானவற்றை விவரிக்கும்விதமாக உரிய விளக்கவுரைகளும், வழிகாட்டல்களும் இடம்பெறும்.
சரித்திரப் பயணத்தில் கலந்துகொள்ளும் அன்பர்களின் உடல் நலம், உடல் சுகவீனம் சார்ந்த விஷயங்கள், அவரவர் சொந்த பொறுப்பாகும். குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
பயணத்தின் நடுவே எதிர்பாராமல் ஏதேனும் தடங்கல்கள் நேரிட்டால், உரிய மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்யப்படும். எனினும், அவற்றின் காரணமாக விளையும் நேர விரயம், மனச் சங்கடம் முதலானவற்றுக்கு விகடன் நிறுவனம் பொறுப்பேற்க இயலாது.
முன்பதிவு செய்தபிறகு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறவோ இயலாது.
முந்துபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணத்துக்கான முன்பதிவுகள் ஏற்கப்படும்.
முன்பதிவு விண்ணப்பங்களை ஏற்பது தவிர்ப்பதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.