வந்தியத்தேவனின் வழியில்
வரலாற்றுப் பயணம்!
* வீராணம் ஏரிக்கரை - சோழ இளவரசன் ராசாதித்தனால் உருவாக் கப்பட்ட பெரும் ஏரி. பொன்னியின் செல்வன் கதை தொடங்கும் இதன் கரையிலேயே, நம் யாத்திரையின் முதல் சங்கமம்.
* காட்டுமன்னார்கோவில்: பிரமாண்டமாக வெட்டப்பட்ட ஏரிக்குத் தன் தந்தையின் சிறப்புப்பெயரையே சூட்டவிரும்பினார் ராசாதித்தன். அதன்படியே வீரநாராயணன் ஏரி எனப் பெயர் ஏற்பட்டது. இதன் அருகிலிருக்கும் விண்ணகரமே வீரநாராயணர் திருக்கோயில். பொன்னியின் செல்வன் கதைக்களமாகவும் திகழ்கிறது இந்தத் தலம்.
* மேலும், கல்வெட்டுகளால் சிறப்புற்ற காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் ஆலயம், புகழ்பெற்ற சம்புவரையர் ஆட்சிசெய்த கடம்பூர் மற்றும் அங்குள்ள ஆலயங்கள் ஆகியவையும் முதல் நாள் யாத்திரையில் இடம்பெறும்.
* இரண்டாம் நாள் யாத்திரை பழையாறையிலிருந்து தொடங்குகிறது. பட்டீஸ்வரம், திருச்சத்திமுற்றம், சோழர்மாளிகை, திருநந்திபுரவிண்ணகரம் உள்ளிட்ட ஊர்கள் அடங்கிய பகுதியே முன்பு பழையாறை எனும் சோழர் தலைநகரமாகத் திகழ்ந்திருக்கிறது.
* யாத்திரையின் அடுத்த நகர்வு உடையாளூர்ப் பகுதி. ராஜராஜசோழன் அந்திம காலத்தில் தங்கியிருந்த பகுதியிது என்பர். அவரின் நினைவிடம் மற்றும் கயிலாசநாதர் கோயில் அமைந்திருப்பது இங்குதான்.
* அடுத்த தரிசனம் பஞ்சவன்மாதேஸ்வரம் ஆலயம் - பஞ்சவன்மா தேவியாரின் பள்ளிப்படை கோயில் இது.
* மூன்றாம் நாளின் முதல் தரிசனம், தஞ்சை பெரியகோயில்..
* தஞ்சையிலிருந்து கோடியக்கரைக்குப் பயணம். கோடியக்கரை- கடற்கரை குழகர்கோயிலில் நிறைவு சங்கமம்
நீங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி.
Thank you for registering.
மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan.com / 9677069112
சரித்திரப் பயணத்தில் பங்கேற்கவுள்ள வாசகர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.
பொன்னியின் செல்வன் - வரலாற்றுப் பயணம் சென்னையில் தொடங்கும் இடமும், நேரமும் யாத்திரையில் பங்கேற்கும் வாசகர்களுக்குப் பிரத்யேகமாகப் பின்னர் அறிவிக்கப்படும்.
பயண காலமாகிய 3 நாள்களும் வாசகர்களுக்கான உணவு, தேநீர் - காபி, மற்றும் இரவில் (2 இரவுகள்) தங்குவதற்குச் சிறப்பான விடுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சரித்திரப் பயணத்தில்… நாம் காணவுள்ள குறிப்பிட்ட இடங்கள் மற்றும் கோயில்களில் உரிய வரலாறுகள், கல்வெட்டுத் தகவல்கள், தொன்மைச் சிறப்புகள் முதலானவற்றை விவரிக்கும்விதமாக உரிய விளக்கவுரைகளும், வழிகாட்டல்களும் இடம்பெறும்.
சரித்திரப் பயணத்தில் கலந்துகொள்ளும் அன்பர்களின் உடல் நலம், உடல் சுகவீனம் சார்ந்த விஷயங்கள், அவரவர் சொந்த பொறுப்பாகும். குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
பயணத்தின் நடுவே எதிர்பாராமல் ஏதேனும் தடங்கல்கள் நேரிட்டால், உரிய மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்யப்படும். எனினும், அவற்றின் காரணமாக விளையும் நேர விரயம், மனச் சங்கடம் முதலானவற்றுக்கு விகடன் நிறுவனம் பொறுப்பேற்க இயலாது.
முன்பதிவு செய்தபிறகு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறவோ இயலாது.
முந்துபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணத்துக்கான முன்பதிவுகள் ஏற்கப்படும்.
முன்பதிவு விண்ணப்பங்களை ஏற்பது தவிர்ப்பதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.